தேடுங்கள்.....

Thursday, September 26, 2013

ஜோக்ஸ் - 10

நர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா இருக்காங்க ? நர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம். அதான்..... 

********************************************************************************* 
மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ? 
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு 

********************************************************************************* என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. . ஏன்... என்னாச்சு ? பில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா... 

********************************************************************************* அவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி சொல்ற..? சதா வாந்தியா வருதுனு சொன்னா... சாதா வாந்தியா, இல்ல ஸ்பெஷல் வாந்தியானு கேட்குறாரே.... 

********************************************************************************* 
அதிகாரி : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ? 
பைலட் : யாரோ ஒரு பாராசூட் வீரர், விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. . 

********************************************************************************* 
கல்யாண புரோக்கர் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக மூத்த மகளுக்கு தங்கத்துலயும், ரெண்டாவது மகளுக்கு வெள்ளிலயும், மூணாவது மகளுக்கு வெண்கலத்துலயும் நகை செஞ்சு போடறதாச் சொல்றது நியாமில்லை சார்....

 ********************************************************************************* தயாரிப்பாளர்: இந்த இயக்குநரை நம்பி காசு போட்டுப் படம் எடுத்தா நிச்சயமா நஷ்டப்பட மாட்டோம்.... நண்பர்: எப்படிச் சொல்றீங்க...? 
தயாரிப்பாளர்: படம் ரிலீசாகும் போது பிரச்சினை ஏற்பட்டு, நஷ்டம் வந்துடாமா இருக்க முன்னெச்சரிக்கையா இப்பவே ஷூட்டிங் பாக்க மக்களுக்கு டிக்கெட் கொடுத்து கலெக்‌ஷனை ஆரம்பிச்சுட்டாரே.... 

********************************************************************************* 
தலைவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியா சொல்றது... ஏன்... அப்படி என்ன சொன்னார்? தன்னுடைய ரெண்டாவது மனைவி வீட்டுக்குப் போறதை, ‘சிங்கம் 2' பார்க்கப் போறேனு சொல்றார்.... 

********************************************************************************* 
என் கணவர் அநியாயத்துக்கு பயப்படறார்... ஏன் என்னாச்சு..? என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட முதல்ல தியேட்டர்ல தான் ரிலீஸ் பண்ணனுமாம். இல்லாட்டி ‘திருட்டு விசிடி' கேஸ்ல 3 வருஷம் கம்பி எண்ணனும்னு பயப்படறார்.... 

********************************************************************************* 
என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா போற மாதிரி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பாங்க....? ‘ராவோட ராவா'.......

 ********************************************************************************* 

 நன்றி! வெப் தமிழன்