தேடுங்கள்.....

Thursday, June 21, 2012

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது 
Once Banta Singh attended an Interview.

Interviewer : Give me the opposite words.
Banta Singh : Ok
Interviewer : Made in India
Banta Singh : Destroyed in Pakistan
Interviewer : Good... Keep it Up
Banta Singh : Bad.... Put it Down
Interviewer : Maxi Mum
Banta Singh : Mini Dad
Interviewer : Enough! Take your Seat
Banta Singh : Insufficient! Don't take my seat
Interviewer : Idiot! Take your seat
Banta Singh : Clever! Don't take my seat
Interviewer : I say you get out!
Banta Singh : You didn't say I come in
Interviewer : I reject you!
Banta Singh : You appoint me
Interviewer : ....!!!!!!!


Thanks to Riyas

Wednesday, June 20, 2012

அற்புதமான உலகம்

நான் பசுமையான மரங்களையும் , சிவப்பு ரோஜாக்களையும்
பார்க்கும் போது எனக்காகவும் உனக்காகவும் அவை பூத்தன என நினைக்கிறேன்
என்ன ஒரு அற்புதமான உலகம்

பிரகாசமான  நீலவான், வெள்ளை மேகங்கள்,
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நாள், இருண்ட புனிதமான இரவு....
என்ன ஒரு அற்புதமான உலகம்

வானவில்லின் வண்ணங்கள், மிக அழகாக வானில்
தெரிந்த, தெரியாத முகங்கள் நிதமும்
என்ன ஒரு அற்புதமான உலகம்

சிறு குழந்தைகளின் உற்சாகம் - மேலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள எத்தனையோ உண்டு
என்ன ஒரு அற்புதமான உலகம்.

Saturday, February 4, 2012

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்


ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்


இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.

அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் கணக்கு ஒரு சில நேரங்களில் முடங்கி போய்விடும். அந்த நேரத்தில் அவர்களின் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துவதற்கு மூன்று வழிகளில் உள்ளது.

அவை Standard, HTML and Mobile. Standard வகையில் ஏதேனும் பிழை இருப்பின் மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.

பெரும்பாலான நேரங்களில் Standard வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளையில் மற்ற இரண்டு வழிகளில் மின்னஞ்சலை பயன்படுத்தலாம்.

HTML வகையில் சென்று பெறுவது முதலில் நீங்கள் இந்த http://mail.google.com/mail/?ui=html இணைப்பிற்கு செல்ல வேண்டும்.

இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை புக்மார்க் செய்து வைத்துக் கொண்டால், Standard வகையில் பிரச்னை ஏற்படும் போது இதனைப் பயன்படுத்தலாம்.

கூகுள் மெயிலின் Mobile பதிப்பு உங்களது கைபேசிகளுக்கானது. இதனை உங்களது கணணியில் பெறுவதற்கு உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும்.

ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறுவதற்கு http://mail.google.com/mail/x/gdlakb/gp/என்ற முகவரியினை டைப் செய்து ஜிமெயிலை பெறலாம்

நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க

நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது, கடைகாரர் எல்லா போன்களும்
தரமானதுதான்னு சொல்லுவார். உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க.சில எண்கள் வரும். இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவினம். ((International Mobile Equipment Identity)(
கேள்விப்பட்டிருப்பீங்கள்).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்

( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில்
தயாரிக்கப்பட்டது.)

0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்

0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.

1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.


இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று IMEI NUMBER CHECK சரி பார்த்து கொள்ளுங்கள்.

அதேபோல் நீங்கள் *#06# டயல் செய்தவுடன் வரும் எண்கள்தான் Battery களிலும்  இருக்கிறதா என்று சரி பார்த்துகொள்ளுங்கள். இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.

நன்றி : பிரசன்னா

Friday, February 3, 2012

International Scores

International Scores: Get the latest scores of all the international cricket matches from Cricinfo. Add the Cricinfo International Scores widget now!

Saturday, January 21, 2012

ShutDown நேரத்தை குறைக்க

நாம் ShutDown கொடுத்தபிறகு சர்விஸஸ்களையும், திறந்திருக்கும் புரொகிராம்களையும் மூடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை விண்டொஸில் உள்ள சில ரிஜிஸ்டரி பதிவுகளே தீர்மானிக்கின்றன.

இந்த ரிஜிஸ்டரி பதிவுகளை மாற்றுவதன் மூலம் Windows XP யை விரைவாக ஷட் டவுன் செய்திட முடியும்.

Start->Run-> Regedit சென்று
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\’ என்ற கீயில் கிளிக் செய்துவலதுபுறம் உள்ள லிஸ்டில் 'WaitToKillAppTimeout' என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value- ஐ 1000 என மாற்றவும். (1000 என்பது ப்ரொஸஸ்களையும், சர்விஸ்களையும் மூடுவதற்கு Windows XP எடுத்துக்கொள்ளும் மில்லி செகண்டுகளை குறிக்கிறது)

பிறகு,
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop’ என்ற கீயில் கிளிக் செய்து வலதுபுறம்உள்ள லிஸ்டில் ‘AutoEndTasks.’ என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value-
ஐ 1 என மாற்றவும்.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் வித்தியாசத்தை காணமுடியும்.

ஷட் டவுனுக்கு ஒரு ஷார்ட்கட்:-

டெஸ்க்டாபில் ரைட் கிளிக் செய்து New-> Shortcut சென்று
கீழ்கண்ட Command-ஐ காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து அதற்கு Fast Shutdown என பெயரிட்டு வைத்துக்கொள்ளலாம்.

%windir%\System32\shutdown.exe -s -f -t 00


குறிப்பு:-
மேற்கண்ட டிப்ஸை உபயோகித்து ஷட் டவுன் செய்வதற்கு முன், அனைத்து வேலைகளையும் சேமித்துக் கொள்ளவும்.

நன்றி : வெப் உலகம் 

படித்ததில் பிடித்தது 1


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

-
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்
அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"


"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

நானோ தொழில்நுட்பம்


நானோ தொழில்நுட்பம்

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10-9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்.


நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலஜி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications." நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப் புறவிசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

தொழில்நுட்பத்தின் தொடக்கம்

இது பற்றி முதலில் டிசம்பர் 29, 1959 ல் இயற்பியல் ஆய்வாளரும் பின்னர் நோபல் பரிசு பெற்ற அறிஞரும் ஆகிய ரிச்சர்டு ஃவெயின்மன் ஓர் உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு "There's Plenty of Room at the Bottom," (உள்ளே ஏராளமாக இடம் உள்ளது). இந்த வருங்காலத் தொழில் நுட்பத்தால் இயற்பியலின் வழி பயன்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசை மற்றும் வேண்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

நானோ தொழில் நுட்பம் (nanotechnology) என்ற சொல்லை முதல் முதலில் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகப் (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவர் 1974ல் அறிமுகப்படுத்தினார்
( 1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நானோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.

1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ நுட்பியல் வளர்ச்சி அடையத்தொடங்கியது.

  • சிறுகூட்ட அணுதொகை அறிவியல் அல்லது துணுக்கறிவியல் (cluster science) பிறப்பு
  • புரை ஊடுருவு மின்னோட்ட வருடு நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) இன் கண்டுபிடிப்பு

பயன்பாடு

இந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துகள்களை (துணிக்கைகளை) ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நானோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக பாரம்பரிய பொலிமரை நானோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் மாழைகளுக்கு (உலோகங்களிற்குப்) பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன