தேடுங்கள்.....

Thursday, September 27, 2012

மர்ம முடிச்சு 1

நான் இந்த மர்ம முடிச்சு தொடரை எனக்கு மிகவும் பிடித்த பெர்முடா முக்கோணத்தில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.
இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இதுசாத்தானின் முக்கோணம்என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.
 

÷”பிளைட்-19′ என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:

÷”" விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.

பிளைட்-19

÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.



÷1872- ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட மேரி செலஸ்டிஎன்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி மேரி செலஸ்டிஎன்று அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

÷ மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.

÷” ஆரான் பர்என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் தியோடோசியா பர் அல்ஸ்பான்’, தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு பேட்ரியாட்எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.

÷ முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.




÷ அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.

÷ இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டதுஎன்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.

÷ மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். ரய் ஃபுகு மருஎனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,”"கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது…! விரைந்து உதவிக்கு வாருங்கள்…”எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.

÷ மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.

÷1962- இல் பிளைட்-19 தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,”"நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை…” என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர்அர்கோசிஎனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,”விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதுஎனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.

÷ இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,”நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்எனும் கட்டுரையும், “கண்ணுக்குத் தெரியாத வெளிகள்மற்றும் சாத்தானின் முக்கோணத்தில்எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், “வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்என்று எழுதப்பட்டிருந்தன.

÷ கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.

÷ இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், “தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டுஎன்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

÷ சில ஆய்வாளர்கள், “”பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றனஎன்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,”"திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றனஎன்ற தகவல்களை வெளியிட்டனர்.

÷ ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,”"உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய ப்ளேக்ரிட்ஜ்பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்

நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாதுஎன்று தெரிவித்திருந்தது.

÷ இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.

மர்ம முடிச்சு தொடரும்.....

நன்றி: திரு. பரணி
      விக்கிபீடியா
      கூகுள்

Wednesday, September 26, 2012

கார்ட்டூன் ஜோக்ஸ் 2















ஈ மெயிலில் வந்தது 2.......... கண்ணிமைக்காமல் கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...




கணப்பொழுது கூட கவனம் சிதறாமல் கருமமே கண்ணாய் கண்ணிமைக்காமல்
கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...

காதல் என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப் பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த என் மனதை Google searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே, என் போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!

உன் நுனிவிரல் நடனமாடும் மேடை கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse க்கு மவுசு ஏறிப்போனதடி!

Microsoft Windows
ஐப் பார்ப்பதை விட்டு என் மனமெனும் windowக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப் பார்!
உன் கணினி mouse pointer என் நெஞ்சில் ஈட்டியாய் பாய, எத்தனை முறை Restart பண்ணினாலும் Hang ஆகிறது இதயம்.

Printer ribbon
பார்க்கும் போதெல்லாம், ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம்.
Busy mouse pointer
இல் Hour-glass பார்த்தால் உன் உடல் வாகு ஞாபகம்.

Intelligent
எனப் பெயரெடுத்த நான், உன்னால் Artificial Intelligence கூட
இல்லாத ஜடமாகிப் போனேன்.

உன் கணினிக்கு மின் தடை பாதிக்காத வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாயே,
நீ இல்லையென்றானால் எனக்கு Back up யாரும் இல்லையடி ( உனக்கு தங்கை யாராவது இருக்காங்களா?)

JPEG format
இல் உன் படங்கள்,
MPEG format
இல் உன் அசைவுகள்,
MP3 format
இல் உன் குரல் என சேமித்து என் மன Hard disk ஐ நிரப்பி விட்டேன்!

உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox என்றும் காத்திருக்கும் !

நன்றி: அசோக் 

ஈ மெயிலில் வந்தது 1.......... இங்கிலீஷ் கதை


"லோ! ஹெள ஆர் யூ?"

"
என்னடா பெரீய பெரீய இங்கிலிஸ் பொளக்கிறே?"

"
வாட்! ஐயாம் ஒன்லி ஸ்மால் இங்கிலீஷ்..."

"
அடிசக்கை. ஹீரோ ஆகிறாயோ இல்லியோ? இங்கிலீஸ் நல்லாப் பேசுவே போலிருக்குது. ஏதானும் வாத்யார் வெச்சிருக்கியா?"

"
யூ ஆர் கரெக்ட். ஐயம் கீப்பிங் இங்கிலீஷ் மிஸ்..."

"
கீப் சீப்பெல்லாம் வெச்சிக்கினியா? ரொம்பத்தான் துட்டு வெளையாடுது உங்கிட்டே? கையிலே எத்தனை படம்?"

"
டூ பிக்சர்ஸ். அப்புறம் ஆடு பிலிம் ஒண்ணு."

"
ஆடு கூட நடிக்கிறியா?"

"
வாட் மான்? ஆடு பிலிம் தெரியாது. ஆர்லிக்ஸ், சோப், பவுடர்... இது மாதிரி படம்."

"
ஓ! விளம்பரப் படமா? என்னா விளம்பரம்... சோப்பு கீப்புன்னா நமக்கு ரெண்டு சீப்பா வாங்கித்தாப்பா..."

"
யூ ஆல்வேஸ் ஷெல்·ப் பினிஷ்...."

"
ஷெல்பெல்லாம் வாங்கியிருக்கியா?"

"
யு ஆர் ரொம்ப புவர் இங்கிலீஷ்..."

"
நானாடா புவரு? கையிலே அஞ்சு விரல்லே மோதிரம் போட்டிருக்கேன்..."

"
நோ... நோ... யு டு நாட் நோயிங் மை இங்கிலீஷ். மை ஆல்ஸோ நாட் நோயிங் பி·போர் பட் ஆ·ப்டர் ஆ·பர் சுப்பீரியர்."

"
இங்கிலீஸ் படிச்சா சூப்பர்வைசர் ஆயிடலாம்கறே?"

"
சொன்னால் ஆங்கர் படறே? இங்கிலீஸ் படிச்சா ஹை ஆயிடுவேன்னு சொல்றேன்... மி மாதிரி..."

"
ஒனக்கு வசதி இருக்குது. இங்கிலீஸ்காரியை வெச்சிகினு இருக்குறே..."

"
வாட்! வாட்! இங்கிலீஷ்காரியை நான் வெச்சிகிட்டிருக்கேனா? அப்ஸட்டாப் பேசாதே. நமக்குள்ளே மிஸ் அண்டர் ஸ்டுட் ஆயிடும். அதை நான் வெல்கம் பண்ணலை."

"
நீ தானேடா சொன்னே... இங்கிலீஸ் டீச்சரை கீப்பா வெச்சிகிட்டிருக்கேன்னு... நடிகனாயிட்டிருக்கிறே... வெச்சுக்கோ நான் பொறாமைப்படலை."

"
எகெய்ன் எகெய்ன் நீ அதையே சொல்லிட்டிருக்கிறே... அதான் புவர்னு சொன்னேன்..."

"
புவர்னு மட்டும் சொல்லாதே. நான் சொந்த வூட்டுலே இருக்கேன். கழுத்திலே பாத்தியா செயினு... அஞ்சு பவுனு..."

"
புவருன்னா ஏழைன்னு அர்த்தமில்லேடா... இங்கிலீஷிலே புவர்னா ஒனக்கு இங்கிலீஷ் நோயிங் அவ்வளவு ஸாடிஸ்பி இல்லே.... இதெல்லாம் பிரேஸ்..."

"
பிரேஸ்னா..."

"
அதான் பிரேஸ¤ங்க... பிரேஸ் போட்டுப் பேசினாத்தான் நல்ல இங்கிலீஷ்..."

"
பிரேஸ் பிரேஸ¤ங்கறியே அது என்னடா எளவு?"

"
பிரேஸ்னா... அதாவது... வந்து... வந்து... இங்கிலீஷே பேசிப் பேசி இப்போ டமில் திங்க் வரமாட்டேங்குது..."

"
நீ உன்னோட இங்கிலீஸ் கூத்தியாகிட்டே போய்க் கேட்டுக்கிட்டு வந்து நாளைக்குச் சொல்லு..."

"
ப்ளீஸ்! அவள் கெளவிடா..."

"
பின்னே அவளைப் போய் ஏன் கீப்பா வெச்சிகினு இருக்கிறே?"

"
கீப்புனு வெச்சிகிட்டு இருக்கேன்னா..."

"
அதான் சொல்லிட்டியே..."

"
நோ.. நோ... யு டு நாட் நாலட்ஜிங் மி கரெக்ட். வெச்சிகிட்டுன்னா தமிழ் வெச்சிகிட்டு இல்லே... இங்கிலீஷ் கீப்புக்கு நெறய அர்த்தம். டீச்சர் போட்டுகிட்டிருக்கேன்னு அர்த்தம். அதான் பிரேஸ்ங்கிறது. அயம் கீப்பிங் ஒன் டாக்குன்னா நான் ஒரு நாயை வப்பாட்டியா வெச்சிகிட்டிருக்கேன்னு அர்த்தமில்லே... அங்கே கீப்புன்னா வளர்த்துகிட்டிருக்கேன்னு அர்த்தம். யாராச்சும் பையன் நல்லா மார்க் வாங்கினால் வாத்தியாரு ப்ராஸஸ் ரிப்போர்ட்டுலே கீப்பு அப்புனு எழுதுவாரு."

"
பையன் பேரு 'அப்பு' இல்லேன்னா?"

"
யார்ரா நீ? யு ஆர் கிண்டலிங் மின்னு நெனைக்கிறேன். கீப்பு அப்புனா நீ மேலே படின்னு அர்த்தம்."

"
அப்புன்னா பேராங்காட்டியும்னு நினைச்சிட்டேன்... கோபிச்சுக்காதே. எனக்கு நீ நடிப்பு கத்துக் குடுக்காட்டியும் போகுது. நாலெழுத்து இங்கிலீஷ் கத்துக் குடுத்துடுப்பா..."

"
நோ ப்ரதர். டைம் இஸ் பிஸி. ஈச் மார்னிங் ஈச் ஷ¥ட்டிங்... அதுவும் அவுட் அ·ப் டோர்னா... நாலு நாள் ஆயிடுது..."

"
பொதுவா அவுட் அ·ப் டோரெல்லாம் மூணு நாள்னு தானே பொம்பிளைங்க சொல்லுவாங்க..."

"
டேய் மவனே... நீ என்னை வார்ரதுக்கின்னே ஸ்பீக் பண்ண வந்திருக்கிறே..? இனி மேல் நான் உன்கிட்டே இங்கிலீஷ் டோன்ட் டாக்..."







நன்றி: ஈகரை சிவா அண்ணா