தேடுங்கள்.....

Wednesday, March 27, 2013

படித்ததில் பிடித்தது 5

காதலி மிஸ்ட் கோல் குடுக்கிறா….

உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்…

அவா: ஹலோ…

இவர்: ஹாய்டா…. சொல்லு…

அவா: இல்ல… சும்மா தான் கோல் பண்ணினன்…

இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்… எப்பயுமே மிஸ்ட் கோல் தானே…

இவர்: ஓ! என்ன பண்றாய்?

அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க?

இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்… இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக் கேக்கிறன்…

அவா: நல்ல பாட்டு…

(இப்பிடியே சொல்லிக் கொண்டு ‘மழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்…’ எண்ட வரிய மெல்லிய குரலில பாடுறா…)

இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?

இவர்: ஹேய்… நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?

அவா: சீ… போடா….

இவர்: இன்னொரு தரம் பாடன்….

அவா: என் றூம் மேற்ஸ் (room mates) எல்லாம் படுத்திற்றாங்க… எழும்பிடப் போறாங்க….

இவர்: (மனதுக்குள்) உண்மைதான்…. பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்…

இவர்: கமோன் டா…. பிளீஸ்….

அவா: போ…….டா…… நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்….

இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே…

இவர்: ஹேய்… நீ பாடினது நல்லா இருந்திச்சுடா…. பிளீஸ் பாடேன்….

அவா: எனக்கு ஒருமாதிரி இருக்குடா….

இவர்: இதில என்னம்மா இருக்கு…. நீ நல்லாத்தானே பாடுறாய்….?

அவா: அத நீ தான் சொல்லணும்… எனக்கெப்பிடித்தெரியும்?

இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்ல… சொல்லிற்றன்…

இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?

அவா: ஏன்டா படுத்திறாய்….

இவர்: ஓகே… விடு…. (விருப்பின்றி)

அவா: எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல…..லடா…..

இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்…

இவர்: ம்… ம்…

அவா: சரி…. இவ்வளவு கேக்கிறாய்…. உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்….

இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்….

இவர்: கிரேட்…

அவா: எந்தப் பாட்டுப் பாடட்டும்?

இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு…. பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன….

இவர்: ம்ம்ம்ம்ம்ம்…. உன் பேரைச் சொல்லும் போதே’ from அங்காடித் தெரு?

அவா: நைஸ் சோங்…. பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா….

இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது…. பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?

இவர்: அப்ப ‘சின்னச் சின்ன ஆசை’?

அவா: இல்ல… உன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்…

இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன…

இவர்: கூல்…

(க்ம்ம்… எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறா… பிறகு ஒரு வரி பாடுறா… பிறகு…)

அவா: இல்ல வேணாம்… நான் shy ஆ பீல் பண்றன்டா….

இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு…. உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே…. பாடு பாடு…

அவா: பாத்தியா… நக்கலடிக்கிறாய் பாத்தியா?

இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே…. பிறகென்ன….

இவர்: இல்லடா…. நீ shy ஆ பீல் பண்றாய் எண்டாய் தானே… அதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்….

அவா: ம்… ம்…

இவர்: பிளீஸ் பாடன்….

அவா: நாளைக்கு பாடட்டுமா?

இவர்: (மனதுக்குள்) அப்பாடா… தப்பிச்சன்….

இவர்: சரிம்மா… உனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு….

அவா: ம்.. ம்…

இவர்: குட் நைட் டா…

அவா: குட் நைட் டா…

இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்…

அவா: ஸ்வீற் ட்றீம்ஸ்…. பாய்…

இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு…

சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்…

அவா: ஏய்… நித்திரை கொண்டிற்றியா?

இவர்: (மனதுக்குள்) இல்ல…. 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்…

இவர்: இல்லம்மா…

அவா: அப்ப என்ன பண்றாய்?

இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்… என்ன கொடுமை இது…

இவர்: இல்ல… மட்ச் பாத்திற்று இருந்தன்…

அவா: சரி அப்ப நீ மட்ச் பாரு… நான் படுக்கிறன்…

அவா: ஹேய்… நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா…

இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி…

இவர்: இல்லடா…. ஒண்டும் இல்லடா…

அவா: ஐ ஆம் சொறிடா…

இவர்: இற்ஸ் ஓகே டா….

(பிறகு வழமையைப் போல குட் நைட், ஸ்வீற் ட்றீம்ஸ் சொல்லி சொல்லி படுத்திருவாங்கள்…..)

படித்ததில் பிடித்தது 4

லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க.

பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?

பொண்ணு: உன் இஷ்டம்

பையன்: சரவணபவன்?

பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்…?

பையன்: அப்போ செட்டிநாடு…?

பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்

பையன்: ம்ம் கேஎஃப்சி….?

பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..

பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு

பொண்ணு: உன் இஷ்டம்…
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?

பொண்ணு: உன் இஷ்டம்…

பையன்: படத்துக்கு போலாமா….?

பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு…

பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?

பொண்ணு: வேணாம்…

பையன்: காஃபி ஷாப்….?

பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்…

பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது….?

பொண்ணு: நீயே சொல்லு…
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்….

பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..

பையன்: ஓ… நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல… பஸ்லதான் போகனும்

பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்

பையன்: அப்போ ஆட்டோ..?

பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?

பையன்: அப்போ நடந்து போகலாம்..

பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது….

பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?

பொண்ணு: உன் இஷ்டம்…

பையன்:……

இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!

Tuesday, March 26, 2013

படித்ததில் பிடித்தது 3

என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”

“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”

“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”

“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”

“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”

“நம்ம வீட்லதாங்க”

“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”

“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”

“நம்ம மாடா?”

“ஆமாங்க”

“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”

“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”

“ஐயய்யோ… எப்பிடிடா?”

“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”

“வீடு எப்படிடா எரிஞ்சது?”

“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”

“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”

“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”

“யார்ரா செத்தது?”

“உங்க அம்மா”

“எப்படி செத்தாங்க”

“தூக்கு போட்டுக்கிட்டு”

“ஏன்?”

“அவமானத்திலதான்”

“என்னடா அவமானம்?”

“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”

“ஓடிப் போனது யாரு?”

“உங்க பொண்டாட்டிதான்”