தேடுங்கள்.....

Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Thursday, November 21, 2013

ஜோக்ஸ் - 11

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...

"
இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?

காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..

ஏன்.. என்ன ஆச்சு..?

என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..

செத்துட்டாங்களா..?

இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
டைரக்டர் : ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..

நடிகை : சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!
டைரக்டர் : ??????????????????????????????????

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ராமு : டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு : ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே

தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருக்காரு!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நள்ளிரவில் அந்த நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்.

இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.

அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.

20
நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.

சார்இ அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள் என்று அலறினான் அவன்.

நான்தான் உங்களுக்கு முன்னமேயே சொன்னேனே நீங்கள் அந்த
படுக்கையில் இருக்கும் பெண்மணியை தொந்தரவு செய்யாத வரையில்
நிம்மதியாக தூங்கலாம் என்றார் பொறுப்பாளர்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்

Friday, August 2, 2013

ஜோக்ஸ் - 9

 *******************************
முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
*******************************
ஞாபக மறதி
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே
*******************************

இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்
அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
*******************************

என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
*******************************


டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்
*******************************


டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
*******************************


அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்
*******************************


இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
*******************************


மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
*******************************


டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே
*******************************

பெண்கள் இப்படித்தான்...



பனி பெய்துகொண்டிருந்த திங்கட்கிழமை காலையில், எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. கார்கள் இரண்டும் மிகப் பலத்த சேதமாகின ஆனால் காரில் பயணம் செய்த இருவருக்கும் தெய்வாதீனமாக ஒன்றும் ஆகவில்லை. 

ஒரு காரினுள்ளேயிருந்து வெளியே வந்த ஆண் மற்றைய காரின் ஓட்டுனராகிய பெண்ணைப் பார்த்து திட்டத்தொடங்கினான். அந்தப்பெண் பொறுமையாக  "இதோ பார் எங்கள் இருவரது கார்களும் பலத்த சேதமாகிவிட்டன, ஆனால் பார் கடவுள் செயலால் நாங்கள் இருவருமே பிழைத்துக்கொண்டோம். ஏன் நாங்கள் நண்பர்களாகி நமது மீதமுள்ள வாழ்நாட்களை சந்தோஷமாக களிக்கக்கூடாதென்றாள் ?"  

அதற்கு அவன் "உண்மைதான் ஆனாலும் தவறு உன் பக்கம்தான், பெண்களை கார்கள் ஓட்ட அனுமதிக்கவே கூடாது என்றான்."  அவள் மேலும் பொறுமையாக, "இதோ பார் இன்னொரு அதிசயம் எனது கார் முழுமையாக சேதமானாலும் நான் வைத்திருந்த வைன் போத்தல் இன்னும் அப்படியே இருக்கிறது, மெய்யாக கடவுள் நாங்கள் இதை அருந்தி எங்களது அதிஷ்டத்தை கொண்டாடவே விரும்புவார் என்றாள்."

சிறுது யோசித்த அவன் "சரி" என்று கை குலுக்கி போத்தலில் இருந்த அரைவாசி வைனை குடித்துவிட்டு மீதமுள்ளதை அவளிடம் நீட்டினான். அவள் திருப்பி அவனிடமே தந்துவிட்டாள்.

அவன், "ஏன் நீ அருந்தவில்லையா?"

அவள், "இல்லை, நான் போலீஸ் வரும் வரையில் காத்திருக்கிறேன் "