தேடுங்கள்.....

Wednesday, September 26, 2012

ஈ மெயிலில் வந்தது 2.......... கண்ணிமைக்காமல் கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...




கணப்பொழுது கூட கவனம் சிதறாமல் கருமமே கண்ணாய் கண்ணிமைக்காமல்
கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...

காதல் என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப் பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த என் மனதை Google searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே, என் போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!

உன் நுனிவிரல் நடனமாடும் மேடை கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse க்கு மவுசு ஏறிப்போனதடி!

Microsoft Windows
ஐப் பார்ப்பதை விட்டு என் மனமெனும் windowக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப் பார்!
உன் கணினி mouse pointer என் நெஞ்சில் ஈட்டியாய் பாய, எத்தனை முறை Restart பண்ணினாலும் Hang ஆகிறது இதயம்.

Printer ribbon
பார்க்கும் போதெல்லாம், ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம்.
Busy mouse pointer
இல் Hour-glass பார்த்தால் உன் உடல் வாகு ஞாபகம்.

Intelligent
எனப் பெயரெடுத்த நான், உன்னால் Artificial Intelligence கூட
இல்லாத ஜடமாகிப் போனேன்.

உன் கணினிக்கு மின் தடை பாதிக்காத வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாயே,
நீ இல்லையென்றானால் எனக்கு Back up யாரும் இல்லையடி ( உனக்கு தங்கை யாராவது இருக்காங்களா?)

JPEG format
இல் உன் படங்கள்,
MPEG format
இல் உன் அசைவுகள்,
MP3 format
இல் உன் குரல் என சேமித்து என் மன Hard disk ஐ நிரப்பி விட்டேன்!

உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox என்றும் காத்திருக்கும் !

நன்றி: அசோக் 

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................