=======================================================================
ஒருவர் சொந்த விஷயமாக வெளியூர் சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்தார். அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு கணினி இருப்பதைப் பார்த்தார். இண்டெர்னெட் தொடர்பும் இருந்தது.
உடனே தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பத் தீர்மானித்தார். அனுப்பும் போது மின்னஞ்சல் முகவரியைத் தவறாக அடித்து விட்டார்!
ஏதோ ஒரு ஊரில் தன் கணவனை முதல் நாள்தான் பறி கொடுத்த ஒரு மனைவி, அனுதாபம் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா? என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.
அவள் மகன் பதறிப்போய் ஓடோடி வந்தான்.அம்மாவைத்தூக்கும்போதே கணினியைப் பார்த்தான்.அதில் இருந்த செய்தி----
”என் அன்பு மனைவிக்கு
என்னிடமிருந்து இவ்வளவு விரைவில் மின்னஞ்சல் வருவது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
வந்து சேர்ந்தவுடனேயே கணினி கிடைத்தது!
உடனே உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இங்கு எல்லாம் வசதியாக இருக்கிறது.
உன் வருகைக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
நாளை உன் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உன் அன்புக் கணவன்.”
மயங்கி விழாமல் என்ன செய்வாள்!

ஒரு இளம் மருத்துவர் ஒரு சிறிய கிராமத்து மருத்துவ மனையின் பொறுப்பேற்கச் சென்றார்.அங்கு அது வரை பணி புரிந்து வந்த வயதான மருத்துவர்,தான் அன்று சில நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது,புதிய மருத்துவரும் உடன் வந்தால் அறிமுக மாகிவிடும் என்று கூறி அவரையும் உடன் அழைத்துச் சென்றார்.
முதல் வீட்டில் இருந்த பெண், தனக்குக் காலை முதல் வயிற்றை வலிக்கிறது என்று கூற, பழைய மருத்துவர்,அவள் பழம் அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால் இருக்கும், எனவே பழத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
அவரது நோய் அறுதியீட்டைக் கண்டு வியந்த புதியவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பெண்ணைப் பரிசோதிக்காமலே எவ்வாறு முடிவு செய்தார் என வினவினார்.
பழையவர் சொன்னார்”அவசியமேயில்லை.நான் அங்கு என் இதயத்துடிப்பு மானியைக் கிழே போட்டேன் அல்லவா.அதை எடுக்கக் குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஏழெட்டு வாழைப்பழத் தோல்களைக் கண்டேன். எனவே அந்த முடிவுக்கு வந்தேன்.”
புதியவர் சொன்னார்”மிக அருமை.அடுத்த வீட்டில் நான் இந்த முறையைக் கடைப் பிடித்துப் பார்க்கிறேன்”
அடுத்த வீட்டுக்குச் சென்றனர்.அங்கிருந்த சிறிது இளம் பெண் அவளுக்கு மிகச் சோர்வாக இருப்பதாகக் கூறினாள்.
புதியவர் சொன்னார்”நீங்கள் கோவிலுக்காக மிக உழைக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.சரியாகி விடும் “என்று.
வெளியே வந்த பின் பழையவர் சொன்னார்”அந்தப் பெண்ணுக்குக் கோவில் வேலைகளில் மிக ஈடுபாடு உண்டு.நீங்கள் சொன்னது சரியே.ஆனால் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?”
புதியவர் பதிலுரைத்தார்”உங்களைப் போலவே நானும் இதய ஒலி மானியைக் கீழே போட்டேன் . அதை எடுக்கக் குனியும்போது கட்டிலுக்கடியில் கோவில் பூசாரி இருப்பதைப் பார்த்தேன்!!”