XXXXXXXX
ராமு:-எனக்குச் சமைப்பது,கழுவுவது,துவைப்பது
இதெல்லாம் செய்து அலுத்து விட்டது;எனவேதான் கல்யாணம் செய்து கொண்டேன்.சோமு:-அடடே! அதே காரணத்துக்காகத்தான் நான் மணவிலக்கு வாங்கினேன்!
XXXXXXXX
ராமு:-நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லுமுன் என் மனைவியை முத்தமிடுவேன்.நீ
எப்படி?சோமு:-நானும்தான்,நீ சென்றபின்.
XXXXXXXX
தர்மம்-அன்றொரு நாள்.....
ஒரு மாலை வேளை........
ரயில்வே ஸ்டேஷன் அது!
நான் டிரெயினின் உள்ளே,
நீ வெளியே.
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில் சந்தித்தபோது
உன் முகத்தில் தான்
எத்தனை உற்சாகம்?
அப்போது தான்
அப்போது தான்
அந்த வார்த்தையை நீ சொன்னாய்
"அய்யா...... தர்மம் போடுங்க சாமி! "
XXXXXXXX
ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.
சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!
XXXXXXXX
இரண்டு பெண்கள்:
முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் ’தேவயானி,தேவயானி’ ன்னு கொஞ்சுவாரு.
இரண்டாமவள்:இப்போ?
முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!
XXXXXXXX
கேள்வியும் பதிலும்1) கேள்வி:ஒரு பச்சை முட்டையை கான்க்ரீட் தரை மீது உடையாமல் போடுவது எப்படி?
பதில்: கான்க்ரீட் தரை எளிதில் உடையாது!
2) கேள்வி:ஒரு சுவரைக் கட்டுவதற்கு எட்டு ஆட்களுக்குப் பத்து மணி நேரம் ஆனதென்றால், நான்கு ஆட்களுக்கு அதைக் கட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
பதில்: கொஞ்ச நேரம் கூட இல்லை.சுவர் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டது!
3) கேள்வி: உன் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும்,நான்கு ஆரஞ்சுகளும்,மறு கையில் நான்கு ஆப்பிள்களும்,மூன்று ஆரஞ்சுகளும் இருந்தால் உன்னிடம் என்ன இருக்கும்?
பதில்; மிகப் பெரிய கைகள்!
4)கேள்வி: ஒரு பாதி ஆப்பிள் மாதிரி இருப்பது எது?
பதில்: மற்றொரு பாதி!
XXXXXXXX
No comments:
Post a Comment
என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................