தேடுங்கள்.....

Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Monday, August 5, 2013

நட்பின் நிழல்




முற்றத்துப் பூமரமாய் என்
முகத்தெதிரே வந்து போகும்
நட்பின் நிழல்கள் உன்னை
நிஜப்படுத்தி கொண்டிருக்கும்

எனது வீட்டுத்தோட்ட
மரங்களில் ஓடித்திரிந்து விளையாடும்
அணில்களின் பாய்ச்சல்கள்
உனது நொடிக்குரும்புகள்

நிலவின் எச்சங்களை
காலங்கடந்த ஆராய்ச்சியில்
மானுடர்கள் புகட்டிடினும்
நட்பின் சுவடுகளையே
முதன்மைப்படுத்துவர்.

பூவின் இதழ்கள் போல
நமது எண்ணங்கள் இணைந்திடும்போது
நட்பின் வாசனைகள்
எல்லை கடந்து விசாலமாகும்.

நட்சத்திரப் பூக்களை
கையில் அள்ளி
நீரோடையாய் பகிர்கிறேன்
நமது நட்பு கடலில் கலக்கட்டும்.

நண்பர்களுக்கு எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்