முற்றத்துப் பூமரமாய் என்
முகத்தெதிரே வந்து போகும்
நட்பின் நிழல்கள் உன்னை
நிஜப்படுத்தி கொண்டிருக்கும்
எனது வீட்டுத்தோட்ட
மரங்களில் ஓடித்திரிந்து விளையாடும்
அணில்களின் பாய்ச்சல்கள்
உனது நொடிக்குரும்புகள்
நிலவின் எச்சங்களை
காலங்கடந்த ஆராய்ச்சியில்
மானுடர்கள் புகட்டிடினும்
நட்பின் சுவடுகளையே
முதன்மைப்படுத்துவர்.
பூவின் இதழ்கள் போல
நமது எண்ணங்கள் இணைந்திடும்போது
நட்பின் வாசனைகள்
எல்லை கடந்து விசாலமாகும்.
நட்சத்திரப் பூக்களை
கையில் அள்ளி
நீரோடையாய் பகிர்கிறேன்
நமது நட்பு கடலில் கலக்கட்டும்.
நண்பர்களுக்கு எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நட்பின் வாசனைகள்
ReplyDeleteஎல்லை கடந்து விசாலமாகும்.
>>
அதுவே நம் விலாசமும் ஆகட்டும். இன்ய நண்பர்கள் தின வாழ்த்துகள்
நன்றிகள் பல....
Deleteநட்பு... அழகு...
ReplyDeleteநன்றிகள் பல.... நண்பரே!
Delete