தேடுங்கள்.....

Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts

Tuesday, July 30, 2013

படித்ததில் பிடித்தது 12




இலவச நிமிடங்கள் 

செல்வா புதிதாக போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்பொன்று வாங்கியிருந்தார்.

செல்வா அவ்வளவு எளிதாக எந்த செலவும் செய்துவிடமாட்டார். அப்படியே செலவு செய்தாலும் ஏதேனும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்.

அவரின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த செல்போன் இணைப்பு அமைந்திருந்தது.

ஒரு மாதத்திற்கு 1440 நிமிடங்கள் இலவசம் என்ற அவர்களின் திட்டம் செல்வாவை வெகுவாகக் கவர்ந்ததால் உடனடியாக அந்த நிறுவனத்தில் புதிய இணைப்பொன்றை வாங்கினார்.

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. செல்வாவின் மனதில் குடியேறியிருந்த சந்தேகம் வலுவடையத் தொடங்கியது.

இனியும் தாமதித்தால் தான் ஏமாற்றப்படுவோமோ என்ற பயத்தில் தனது நண்பனை அழைத்து " மச்சி ஒரு மாசத்துக்கு எத்தன நாளு ?" என்று கேட்டார்.

"
நாலாம் தேதி ஒரு நாலு வரும் , அப்புறம் பதினாலாம் தேதி ஒரு நாலு வரும், அப்புறம் இருபத்தினாலம் தேதி ஒன்னு ஆக மொத்தம் ஒரு மாசத்துக்கு மூணு நாலு! " என்று சொன்னார் அவரது நண்பர்.

எரிச்சலடைந்த செல்வா " ஐயோ நான் கேட்டது நாள் (DAY ) , நம்பர் இல்ல! " என்றார்.

"
அது மாசத்தப் பொறுத்து வரும்! "

"
சரி இந்த மாசத்துக்கு எத்தன நாளு ? "

"
இது ஜூலை மாசம் , இந்த மாசத்துக்கு 31 நாள் வரும்! " என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார் அந்த நண்பர்.

உடனடியாக அந்த செல்போன் கம்பனிக்கு அழைத்த செல்வா " மேடம் இந்த மாசத்துக்கு எத்தன நாள் ? " என்றார்.

"
உங்களுக்கான டீடைல் தான் செக் பண்ணிட்டு இருக்கேன் சார் , உங்க பேர் சொல்லுங்க! " என்றார்.

"
இந்த மாசத்துக்கு எத்தன நாளுன்னு கேட்டா கூட செக் பண்ணி சொல்லுறேன்னு சொல்லுறாங்க, கொடுமைடா!" என்று மனதில் நினைத்துகொண்டு தனது பெயரைக் கூறினார்.

"
சார் இந்த மாசத்துக்கு எத்தன நாள் நீங்க பேசிருக்கீங்கனு தகவல் வேணுமா?" என்றார் அந்த அதிகாரி.

"
அதில்லைங்க , இந்த மாசம் ஜூலைக்கு மொத்தம் எத்தன நாள் ? " என்று தெளிவாகக் கேட்டார் செல்வா.

"
இந்த டீடைல் இங்க கிடைக்காது சார் , இருந்தாலும் சொல்லுறேன் 31 நாள்! " என்றார்.

செல்வாவிற்கு தூக்கிவாரிப்போட்டது, மேலும் தான் ஏமாந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக அந்த அதிகாரியிடம் " அப்படின்னா எனக்கு தரவேண்டிய அந்த ஒருநாள எப்படி தருவீங்க ? " என்றார்.

"
உங்களுக்குத் தரவேண்டிய ஒருநாளா? என்ன சொல்லுறீங்க ?" என்றார் அந்த அதிகாரி.

"
கனெக்சன் தரும்போது அவ்ளோ அருமையா பேசுறீங்க, இப்ப மட்டும் மறந்திருவீங்களா ? என்னோட பிளான் படி எனக்கு 1440 நிமிஷம் இலவசம்னு சொன்னீங்கள்ல, 1440 நிமிசம்னா ஒரு நாள் , அந்த நாள எனக்கு எப்படி தரப்போறீங்க? அப்புறம் இலவசமா தர்ற நாளுக்கு(கிழமை) என்ன பேரு வைக்கப் போறீங்க ? அப்படின்னா என்னோட மாசத்துக்கு 32 நாள் வரணும்ல?" என்றார்.

செல்வாவின் இந்தக் கேள்வியால் கதிகலங்கிப்போன அந்த அதிகாரி உடனடியாக இணைப்பைத் துண்டித்தார்!




Saturday, February 4, 2012

நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க

நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது, கடைகாரர் எல்லா போன்களும்
தரமானதுதான்னு சொல்லுவார். உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க.சில எண்கள் வரும். இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவினம். ((International Mobile Equipment Identity)(
கேள்விப்பட்டிருப்பீங்கள்).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்

( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில்
தயாரிக்கப்பட்டது.)

0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்

0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.

1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.


இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று IMEI NUMBER CHECK சரி பார்த்து கொள்ளுங்கள்.

அதேபோல் நீங்கள் *#06# டயல் செய்தவுடன் வரும் எண்கள்தான் Battery களிலும்  இருக்கிறதா என்று சரி பார்த்துகொள்ளுங்கள். இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.

நன்றி : பிரசன்னா