படித்துச் சுவைத்தவை.......
அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்க்கு,
கடந்த வருடம் நான் காதலன் 10.0 -ல் இருந்து தன்னிறைவு அடைந்து கணவன் V1.0 க்கு மாறினேன். நான் மென்பொருளை மாற்றின
நாள்
முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலடங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது. குதிரை
மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு. குறிப்பா சொல்லனுமுனா
நகைக்கடை, கைபேசி, வெளியே சுற்றுதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது
காதலன் 10.0. ஆனால் கணவன் V1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.
நான்
கணவன் V1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது.
ஆனால் இப்பொழுது கைபேசி 2.0 -யை எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு
கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்ற பதிலையே தருகிறது. எப்போதாவது
ஒரு முறை வேலை செய்ததாலும் அது அமைதி 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7
யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது. வெளியே சுற்றுதல்
3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது.
கணவன்
V1.0-னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே
நீக்க பட்டு இருக்கு; அதற்கு பதிலா செய்தி 3.0, கிரிக்கெட் 3.0, இணையதளம்
1.5 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது. பேச்சு 10.0 இப்ப
வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து
விடுகிறது.
முக்கிய விஷயம் நீங்க அறிவுறுத்திய குற்றம்
கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே
பிரயோசனம் இல்லை. இடையிடையே மாமியார் 1.0 என்ற வைரஸ் பின்புலத்திலே
செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது.
இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.
இப்படிக்கு,
கணவனைத் தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் மனைவி
***********************************************************************************
அன்புள்ள வாடிக்கையாளரே,
நீங்க
இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா
கணவன் V1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை
காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை
6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க.
அழுகை மற்றும் குற்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகிக்கவும்.
கணவன்
V1.0 - ஐ நீங்க ஒழுங்கா பயன்படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை
2.3, வெளியே சுற்றுதல் 3.9 ஆகியன எல்லாம் சரியாக வேலை செய்யும். கணவன்
V1.0 -வை தாறுமாறாக பயன்படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணியடி 2.7 ஆகிய
வைரஸ்கள் வர வாய்ப்புள்ளது. அதிலும் தண்ணியடி 2.7 மிக மோசமான வைரஸ் ஆகும்.
அது குறட்டை 2.0, அடிதடி பீட்டா V3.6 ரெண்டையும் உடன் கூட்டி வந்து
உங்களுடன் மோசமாக நடப்பதுடன் உடலுக்கும் உறு விளைவிக்கும்.
எல்லா
மாமியார் 1.0 வும் வைரஸ் கிருமி இல்லீங்க... அதில் உங்களுக்கு தோன்றும்
குறைகளை அழித்தால் அது அம்மா V100.0 போல் இருக்கும். கணவன் V1.0 - ஐ
சரியாக பயன்படுத்தினால் அது தரமாக உழைத்து உங்களுக்கு உதவிசெய்யும்.
இதனுடன்
சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0
தரவிறக்கம் செய்ய வேண்டாம், கணவன் V1.0 - க்கும் அதுக்கும் ஏழாம்
பொருத்தம். கணவன் V1.0 உடைந்து போகும்.
சுருக்கமா சொல்லப்போன கணவன்
V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க
வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது, அதன் செயல் திட்டம்
அப்படிப்பட்டது.
நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது
எப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை
அதிகப்படுத்துவதோடு, செயல்படும் திறனையும் அதிகப்படுத்தலாம்.
இதயெல்லாம்
விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று
கேட்கக்கூடாது. அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு கணவன் V1.0 ஆயிரம்
மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.
நன்றி,
மென்பொருள் வடிவமைப்பாளர்.