தேடுங்கள்.....

Thursday, August 16, 2012

பொது அறிவுத் தகவல்கள்

  • அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகம் கங்காரு என்பது நாமறிந்ததே... கங்காருக்களில் 50க்கு மேற்பட்ட வகைகள் உண்டாம்.
  • கடல் மட்டத்திற்கு கீழே நிலப்பகுதியினைக் கொண்டிராத ஒரே கண்டம் அந்தாட்டிக்கா கண்டமாகும்.
  • உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.
  • கெட்பிஷ் (பூனை மீன்) 100000 சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளதாம் ஆனால் மனிதர்களுக்கு 10000 சுவை அரும்புகள்தான் உண்டாம்.
  • ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இல்லையாம். ஆனால் ஆபிரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உண்டாம்.
  • ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவிலுள்ள ஒரு நகரமானது '6 ' என்றே அழைக்கப்படுகின்றது.
  • குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.
  • நீல நிறத்தினைப் அடையாளங் காணக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.
  • மண்புழுக்கள் 5 இதயங்களைக் கொண்டுள்ளன.
  • வேபி ரொபின் பறவைகள் மண்புழுக்களினை விரும்பி உண்ணுமாம். அவை நாளாந்தம் உண்ணும் மண்புழுக்களிள் மொத்த நீளம் சராசரியாக 14அடியளவிலாகும்.
நன்றி  :http://www.eegarai.net

1 comment:

  1. \\உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.\\ அதெப்படி ...? அணு ஆயுதம் போட்ட இடத்தில் புள் பூண்டு கூட முளைக்காதே ..? ஆனால் புயல் தாக்கினாலும் சில நாட்களில் சகஜ நிலைமைக்கு வந்து விடலாமே ?

    \\குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.\\ எந்த தத்துவத்தின் அடிப்படையில்? ஆதாரம் ????

    ReplyDelete

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................