தேடுங்கள்.....

Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Friday, August 9, 2013

ஆண்களுக்கான மச்ச பலன்கள்!

images
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.
இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்களை பார்ப்போமா…

01. புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
02. நெற்றியின் வலது புறம் & தனயோகம்
03. வலது புருவம் & மனைவியால் யோகம்
04. வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
05. வலது கண் & நண்பர்களால் உயர்வு
06. வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
07. இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
08. மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
09. மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
10. மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
11. மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
12. மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
13. மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை,
கலைத்துறையில் நாட்டம்
14. வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
15. இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
16. வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
17. இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
18. காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
19. தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
20. கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
21. இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால்
விரும்பப்படுவார்
22. வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
23. வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
24. அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார,
ஆடம்பர வாழ்க்கை
25. புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

நன்றி: துளிகள் வெப்

Tuesday, July 30, 2013

படங்களும் தகவல்களும் - 1

பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.
இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி 
ஆகும்.


















Tuesday, May 14, 2013

பார்கோட்ஸின் ரகசியம் தெரியுமா?



இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக இந்த பார்கோட், இவற்றுள் இருக்கும் தகவல்கள் என்ன என்பது தெரியுமா?
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக சீனா பொருட்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம், ஏனென்றால் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் தற்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
நாம் எப்படி சீன, தைவான் பொருட்களை தான் நாம் வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது பார்கோடின் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம், 471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
மற்ற நாடுகளின் பார்கோடுகளும் கீழே தரப்பட்டுள்ளது, இதை வைத்து நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia.
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 - 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals
(ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Friday, April 5, 2013

படித்ததில் பிடித்தது 7

பில்கேட்ஸ் அமெரிக்காவில் ஓர் உயர்தர ஓட்டலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்தவுடன் பில் தொகையுடன் ஐந்து டாலர்கள் அந்த சர்வருக்கு டிப்ஸ் தந்தார்.

சர்வரின் நெற்றி சுருங்கியது.

""பில் தொகையில் வித்தியாசமா?'' பில்கேட்ஸ் கேட்டார்.

""இல்லை சார்... நேற்று இதே ஓட்டலில் உங்கள் பையன் உணவருந்திவிட்டுச் சென்றார். அவர் அந்த சர்வருக்கு 50 டாலர்கள் டிப்ஸ் தந்தார். நீங்கள் அவருடைய தந்தை. பலகோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர். ஐந்து டாலர்கள்தான் தருகிறீர்கள். ஆச்சரியமாக இருந்தது''

பில்கேட்ஸ் சிரித்துக் கொண்டே சொன்னார்:

""அவனுடைய தந்தை ஒரு கோடீஸ்வரர். ஆனால் என்னைப் பெற்றவர் ஒரு மரத் தொழிலாளிதான். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். கடந்த காலம் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்'

*************************************************************************************
குரு இறக்கும் தருவாயில் இருப்பதை அறிந்த சீடன், அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்துக்குச் செல்லாமல், கடைவீதிக்கு ஓடினான். குருவுக்குப் பிடித்த கொய்யாப் பழத்தை வாங்கிக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தான்.

குரு அதைச் சுவைத்து உண்ணத் தொடங்கினார்.

சீடன் கேட்டான்:

""குருவே, எங்களை விட்டுப் போகப் போகிறீர்கள். நாங்கள் எப்போதும் நினைவில் கொள்ள உங்கள் கடைசி அறிவுரை என்ன?''

""இந்தக் கொய்யாப் பழம் ரொம்பவும் சுவையாக இருந்தது'' புன்னகையுடன் சொல்லிவிட்டு குரு இறந்து போனார்.

சாவைத் தடுக்க முடியாது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் கணத்தில் என்ன செய்கிறோமோ அதுதான் வாழ்க்கை. அதை மகிழ்ச்சிகரமாக அனுபவி என்று குரு சொன்னதை சீடர்கள் புரிந்து கொண்டனர்.
************************************************************************************
அந்த ஓட்டலுக்கு மூன்று நண்பர்கள் தங்க வந்திருந்தனர். அவர்களுக்கு ஏழாவது மாடியில்தான் தங்க அறை கிடைத்தது. ஓட்டல் முதலாளி அவர்களிடம், ""இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் லிஃப்ட் வேலை செய்யாது. அப்புறம் நூறு படிகளை ஏறித்தான் உங்கள் ரூமுக்குப் போக முடியும். அதனால் பத்து மணிக்குள் வந்துவிடுங்கள்'' என்றார் கண்டிப்புடன்.

ஆனால் நண்பர்கள் வெளியே போய்விட்டுத் திரும்பி வரும்போது இரவு 11 மணியாகிவிட்டது. லிஃப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் மூச்சு வாங்க படியேறி ரூம் வாசலை அடைந்தனர்.

நண்பர்களில் ஒருவன் சொன்னான்: ""நான் அறைச் சாவியை ரிசப்ஷனில் கொடுத்திருந்தேன். வரும்போது ஞாபக மறதியால் அதை வாங்கி வரவில்லை. யாராவது கீழே போய் எடுத்துட்டு வர முடியுமா?''

இன்னொருவன் சாவியை வாங்க படிகளில் இறங்கி கீழே போய்விட்டு மூச்சிரைக்க இரைக்க மாடிப்படி ஏறி வந்தான்.

""ரிசப்ஷனில் சாவியைக் கொடுக்கலையாமே'' என்றான் சிறிது கோபத்துடன்.

""ஆமாம்.. சாவி என் பேண்ட் பாக்கெட்டில்தான் இருக்கு'' என்று சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க முயன்றான். பூட்டுத் திறக்கவில்லை.

""ஏன் திறக்கமாட்டேங்குது. நாம் ரூம் மாறி வந்துட்டோமா?'' என்று கேட்டான்.

அதற்கு மூன்றாமவன் சொன்னான்: ""நாம் தங்கியிருந்தது இந்த ஓட்டல் இல்லை. அது பக்கத்துத் தெருவில் இருக்கு''
*************************************************************************************
ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் தமது அரண்மனை சோதிடரைக் கூப்பிட்டார். தமது ஜாதகக் குறிப்பை அவரிடம் கொடுத்தார்.

""இதைப் பாருங்கள், என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லுங்கள்?'' என்றார்.

சோதிடர் அதை வாங்கிப் பார்த்தார். கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்தார்.

அப்புறம் சொன்னார், ""அரசே, உன்னுடைய உறவினர்கள் எல்லோரும் உனக்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள். நீ உனது கைகளாலேயே அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டிவரும்!'' என்றார்.

இதைக் கேட்டதும் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் உறவினர்கள் மீது அவருக்கு அளவுகடந்த பாசம் இருந்தது.

உடனே, சேவகர்களை அழைத்து, ""இந்த சோதிடருக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன். உடனே சிறையில் அடையுங்கள்!'' என்று உத்தரவு போட்டார்.

பிறகு, இன்னொரு சோதிடரை அழைத்து வரச் செய்தார். அவரிடம் ஜாதகத்தைக் கொடுத்து, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கச் சொன்னார்.

அவர் சொன்னார், ""அரசே! உங்களுடைய ஜாதகம் மிகவும் நல்ல ஜாதகம். உங்களுடைய உறவினர்கள் எல்லோரையும்விட நீங்கள் அதிக காலத்துக்கு வாழ்வீர்கள்'' என்றார்.

இதைக் கேட்டதும் ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி! அந்த சோதிடருக்கு நிறைய வெகுமதிகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... இரண்டு சோதிடர்களும் சொன்ன செய்தி ஒன்றுதான்! ஆனால் ஒருவருக்குக் கிடைத்தது ஆயுள் தண்டனை. இன்னொருவருக்கு வெகுமதி கிடைத்தது.

என்ன காரணம்? இரண்டாவது சோதிடர் சரியான

உத்தியைக் கையாண்டார். அவ்வளவுதான்!
*************************************************************************************

Friday, November 16, 2012

நிபிறு பிரளயம்






உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.

பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.

இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.

இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.

உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.

சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 23 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே 'நிபிறு பிரளயம்' எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.

இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.

இதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.

மேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புதியதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே.

மேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.

இவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.

மேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.

குறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.

குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.

மேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு IRAS (Infrared astronomical satellite) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக 'Planet X /(நிபிறு)' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாhட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.

2009
ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று குறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா? என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.

வசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தினை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

உண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது... எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.

இந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

ஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.

உண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்!


நன்றி! வெப் உலகம்