தேடுங்கள்.....

Showing posts with label General Knowledge. Show all posts
Showing posts with label General Knowledge. Show all posts

Tuesday, July 30, 2013

படங்களும் தகவல்களும் - 1

பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.
இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி 
ஆகும்.


















Thursday, August 16, 2012

பொது அறிவுத் தகவல்கள்

  • அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகம் கங்காரு என்பது நாமறிந்ததே... கங்காருக்களில் 50க்கு மேற்பட்ட வகைகள் உண்டாம்.
  • கடல் மட்டத்திற்கு கீழே நிலப்பகுதியினைக் கொண்டிராத ஒரே கண்டம் அந்தாட்டிக்கா கண்டமாகும்.
  • உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.
  • கெட்பிஷ் (பூனை மீன்) 100000 சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளதாம் ஆனால் மனிதர்களுக்கு 10000 சுவை அரும்புகள்தான் உண்டாம்.
  • ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இல்லையாம். ஆனால் ஆபிரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உண்டாம்.
  • ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவிலுள்ள ஒரு நகரமானது '6 ' என்றே அழைக்கப்படுகின்றது.
  • குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.
  • நீல நிறத்தினைப் அடையாளங் காணக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.
  • மண்புழுக்கள் 5 இதயங்களைக் கொண்டுள்ளன.
  • வேபி ரொபின் பறவைகள் மண்புழுக்களினை விரும்பி உண்ணுமாம். அவை நாளாந்தம் உண்ணும் மண்புழுக்களிள் மொத்த நீளம் சராசரியாக 14அடியளவிலாகும்.
நன்றி  :http://www.eegarai.net

தெரிந்துகொள்ளுங்கள்

  • ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
  • சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.
  • எல்லோரும்  நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.
  • ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.
  • வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.
  • உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.
  • ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.
  • உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.
  • ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
  • நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.
  • ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.
  • ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.
  • தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
  • டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.
  • நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.
  • ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.
  • நாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது.
  • இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா

நன்றி  http://www.eegarai.net