தேடுங்கள்.....

Friday, August 2, 2013

பெண்கள் இப்படித்தான்...



பனி பெய்துகொண்டிருந்த திங்கட்கிழமை காலையில், எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. கார்கள் இரண்டும் மிகப் பலத்த சேதமாகின ஆனால் காரில் பயணம் செய்த இருவருக்கும் தெய்வாதீனமாக ஒன்றும் ஆகவில்லை. 

ஒரு காரினுள்ளேயிருந்து வெளியே வந்த ஆண் மற்றைய காரின் ஓட்டுனராகிய பெண்ணைப் பார்த்து திட்டத்தொடங்கினான். அந்தப்பெண் பொறுமையாக  "இதோ பார் எங்கள் இருவரது கார்களும் பலத்த சேதமாகிவிட்டன, ஆனால் பார் கடவுள் செயலால் நாங்கள் இருவருமே பிழைத்துக்கொண்டோம். ஏன் நாங்கள் நண்பர்களாகி நமது மீதமுள்ள வாழ்நாட்களை சந்தோஷமாக களிக்கக்கூடாதென்றாள் ?"  

அதற்கு அவன் "உண்மைதான் ஆனாலும் தவறு உன் பக்கம்தான், பெண்களை கார்கள் ஓட்ட அனுமதிக்கவே கூடாது என்றான்."  அவள் மேலும் பொறுமையாக, "இதோ பார் இன்னொரு அதிசயம் எனது கார் முழுமையாக சேதமானாலும் நான் வைத்திருந்த வைன் போத்தல் இன்னும் அப்படியே இருக்கிறது, மெய்யாக கடவுள் நாங்கள் இதை அருந்தி எங்களது அதிஷ்டத்தை கொண்டாடவே விரும்புவார் என்றாள்."

சிறுது யோசித்த அவன் "சரி" என்று கை குலுக்கி போத்தலில் இருந்த அரைவாசி வைனை குடித்துவிட்டு மீதமுள்ளதை அவளிடம் நீட்டினான். அவள் திருப்பி அவனிடமே தந்துவிட்டாள்.

அவன், "ஏன் நீ அருந்தவில்லையா?"

அவள், "இல்லை, நான் போலீஸ் வரும் வரையில் காத்திருக்கிறேன் "

2 comments:

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................