தேடுங்கள்.....

Friday, August 2, 2013

ஜோக்ஸ் - 9

 *******************************
முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
*******************************
ஞாபக மறதி
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே
*******************************

இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
“
எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்”
“
அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
*******************************

என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
*******************************


டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்
*******************************


டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
*******************************


அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்
*******************************


இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
*******************************


மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
*******************************


டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே
*******************************

பெண்கள் இப்படித்தான்...



பனி பெய்துகொண்டிருந்த திங்கட்கிழமை காலையில், எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. கார்கள் இரண்டும் மிகப் பலத்த சேதமாகின ஆனால் காரில் பயணம் செய்த இருவருக்கும் தெய்வாதீனமாக ஒன்றும் ஆகவில்லை. 

ஒரு காரினுள்ளேயிருந்து வெளியே வந்த ஆண் மற்றைய காரின் ஓட்டுனராகிய பெண்ணைப் பார்த்து திட்டத்தொடங்கினான். அந்தப்பெண் பொறுமையாக  "இதோ பார் எங்கள் இருவரது கார்களும் பலத்த சேதமாகிவிட்டன, ஆனால் பார் கடவுள் செயலால் நாங்கள் இருவருமே பிழைத்துக்கொண்டோம். ஏன் நாங்கள் நண்பர்களாகி நமது மீதமுள்ள வாழ்நாட்களை சந்தோஷமாக களிக்கக்கூடாதென்றாள் ?"  

அதற்கு அவன் "உண்மைதான் ஆனாலும் தவறு உன் பக்கம்தான், பெண்களை கார்கள் ஓட்ட அனுமதிக்கவே கூடாது என்றான்."  அவள் மேலும் பொறுமையாக, "இதோ பார் இன்னொரு அதிசயம் எனது கார் முழுமையாக சேதமானாலும் நான் வைத்திருந்த வைன் போத்தல் இன்னும் அப்படியே இருக்கிறது, மெய்யாக கடவுள் நாங்கள் இதை அருந்தி எங்களது அதிஷ்டத்தை கொண்டாடவே விரும்புவார் என்றாள்."

சிறுது யோசித்த அவன் "சரி" என்று கை குலுக்கி போத்தலில் இருந்த அரைவாசி வைனை குடித்துவிட்டு மீதமுள்ளதை அவளிடம் நீட்டினான். அவள் திருப்பி அவனிடமே தந்துவிட்டாள்.

அவன், "ஏன் நீ அருந்தவில்லையா?"

அவள், "இல்லை, நான் போலீஸ் வரும் வரையில் காத்திருக்கிறேன் "

தண்ணி அடிச்சுட்டு யோகா செய்தால் இப்படித்தான்....


Thursday, August 1, 2013

ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?





ரஜினிகாந்த் முறை:

1)
இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப்போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்துவிடும்

2)
இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிட்டால் போது, எடை தாங்காமல் உயிரைவிட்டுவிடும்

கமலஹாசன் முறை:

சிங்கத்தின் அருகே சென்று ஓவென்று கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் செத்துவிடும் சிங்கம்

ஜெயலலிதா முறை:

இரவு 2 மணிக்கு, போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனைக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைக் கொல்வதுதான்.

கருணாநிதி முறை:

முதலில் சிங்கத்தை உடன் பிறப்பாக்க வேண்டும். ஆக ஒரு மாதம் தொடர்ந்து, 'என் சிங்கமே, என் உடன் பிறப்பே ' என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு, ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து, 'சிங்கமே, என் உடன் பிறப்பே.. நீ எனக்காக தற்கொலை செய்து கொள்ளாதே ' என்ற ரீதியில் கடிதம் வந்ததும், தலைவர் தன்னை தற்கொலை செய்து கொள்ள சொல்கிறார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும். அவ்வளவுதான்.

மணிரத்னம் முறை:

சிங்கத்துக்கு சூரிய வெளிச்சமே காட்டக்கூடாது. ஒரே ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் அதனிடம் குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருக்கவேண்டும். எரிச்சலில் தற்கொலை செய்துகொண்டுவிடும்.

பாலச்சந்தர் முறை:

ஒரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். நமது சிங்கமும், பெண் சிங்கமும் காதலில் விழும். இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள், அப்புறம் இன்னொரு பெண் சிங்கத்தை. அப்புறம் ஒரு ஆண் சிங்கத்தை. முதல் ஆண் சிங்கம் இரண்டாவது பெண் சிங்கத்தை காதலிக்கும். முதல் பெண்சிங்கம் இரண்டாவது ஆண் சிங்கத்தை காதலிக்கும். சரி, இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். புரியலை இல்லையா.. சரி 15 வருடம் கழித்து இதை மீண்டும் படித்துப்பாருங்கள்.. ம்ஹ்ஊம் செய்யமாட்டார்கள்

பாரதிராஜா முறை:

நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அருவாளால் ஒரே போடு. அவ்வளவு தான். தீர்ந்தது.

சங்கர் முறை:

சிங்கத்தை ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலை செட்டிங் போட்டு, நல்ல அழகான லொகேஷனில் கம்ப்யூட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.

விஜயகாந்த் முறை:

இன்னும் 5 சிங்கங்களைக் கொண்டுவந்து, எல்லாவற்றுடனும் ஒரே நேரத்தில் சண்டையிட்டு ஐந்தையும் கொன்றுவிட்டு, கடைசி சிங்கத்திடம், (நம் பழைய சிங்கம்தான்) தேசபக்தி, நாடு, மக்கள் என்று அரைமணிநேரத்துக்குப் பேசினால், ஆச்சரியம், சிங்கம் பசுவாகிவிடும்.

டி ராஜேந்தர் முறை:

ஒரு பெண்சிங்கத்தை கூட்டிக்கொண்டுவாருங்கள். நம்முடைய சிங்கம் இந்த பெண் சிங்கத்திடம் காதலில் விழும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். 6 அல்லது 7 பாடல்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முக்கியமான விஷயம், பாடலில் சிங்கம் என்று வந்தால் சிங்கத்தை காண்பிக்க வேண்டும், கொசு என்று வந்தால் கொசுவைக் காண்பிக்க வேண்டும். இறுதியில் காதல் உடையும்படி பார்த்துக்கொண்டால் போதுமானது, இன்னும் கொஞ்சம் இது போன்ற பாட்டுக்களைப் பாடி சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும்.

ஷாருக்கான் முறை:

அசோகா மாதிரி ஒரு படத்தை எடுத்து சிங்கத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தவேண்டும்.

கோவிந்தா முறை:

அந்த சிங்கத்தின் முன்னால், 6 அல்லது 7 நாட்கள் தொடர்ந்து நடனமாடுங்கள்

ராகுல் திராவிட் முறை:

சிங்கத்தை உங்களுக்கு பந்து போடச்சொல்லி, 200 பந்துகளுக்கு பின்னர் 1 ரன் எடுத்தால் போதும்