‘லவ்வைச்
சொல்ல சில ஜிவ் வழிகள்!’
லவ் @ லாஸ்ட் நிமிடம்!
உங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது
வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க.
இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி சொப்னா, கும்மிடிப்பூண்டிக்கு ‘கூ குச் குச்’ வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டே நிமிசம்தான் இருக்கு
ரயிலு கெளம்ப. ‘நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்’னு பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி
போயி நின்னுக்கணும்.
ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும். ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க ‘ச்ச்சொப்புனாஆஆ…’ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர
ஆரம்பிக்கணும். நாலு பேர் மேல மோதணும், ரெண்டு தடவ லக்கேஜ் தட்டி விழணும்.
நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி
படபடப்பா பாக்கணும். ‘இந்தா புடிச்சுக்கோ’ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில
கொடுக்கறப்போ, ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு குட்டி பேப்பர்ல (ஸ்பெல்லிங் மிஸ்டேக்
இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த ‘லவ் @ லாஸ்ட்
நிமிட்’ல காதல் குபீர்னு
பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு ‘லவ்வாயணம்’ சொல்லுது. சொப்னா சட்டுன்னு செயினைப்
புடிச்சி இழுத்து ரயிலை
நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி…. ‘நாலு அறை’ கூட விடலாம். யாரு கண்டா!
பஸ் ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு, புடிச்சிருக்கு, உன்னை, மனசை, காதலை, எல்லாம் புடிச்சிருக்கு, காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல, நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!
கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க. பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட ‘படார்’னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தர சொல்லுங்க! யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,
சன்னைத் தின்ன முடியாது – மானே
உன் கண்ணு சன்னு!
பப்ஸைத் தின்ன முடியும் – மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸுக்கு நோஸ் கெடையாது – தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா!
என் எதயம் ஒரு Hard Disk!
நீ வந்துப்புட்ட -
இனி அது Heart Disk!
நீ உன் எதயம் give.
நான் என் எதயம் give.
அதுக்குப் பேருதான் லவ்வு!
இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்குப்புறம் சான்ஸே இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!
டவுன் பஸ். முதல் சீட்டில் சொப்னா! நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க! ’2 ரூபா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 2 ரூபாயை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 2 ரூபாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா! உடனே கருமம் புடிச்ச மாதிரி வாங்காம, ‘எனக்கு 2 ரூபா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்’ பளிச்சுன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை நெஞ்சுல இருந்து எடுத்து விடணும். அப்புறமென்ன, உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல போய்கூட நிக்கலாம்.
சொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா? முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற?’ன்னு சொப்னா கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரணும். அப்பவும் உட்டுட்டா, அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமூ!
காதலை நேரே சொல்லப்போனா உதடு ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும்
வார்த்தைகள், அதாம்பா SMS. அதுலயும் ‘I LOVE YOU!’ அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப
விரலு மிரளுதா? தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி
அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு
ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க! இது ரொம்ப பாதுகாப்பான
வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க்.
சொப்னா
மெஸேஜை ‘Y I LOVE U’ன்னு தப்பா
புரிஞ்சுக்கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம்
சகஜம்பா!
(ஒரு சின்ன திருத்தம்: தலைப்பு மேலே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜமான தலைப்பு இதுவே : ‘லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!’ )
லவ் @ லாஸ்ட் நிமிடம்!
ரெமோ நமஹ!
பஸ் ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு, புடிச்சிருக்கு, உன்னை, மனசை, காதலை, எல்லாம் புடிச்சிருக்கு, காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல, நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!
கவிதையே தெரியுமா!
கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க. பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட ‘படார்’னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தர சொல்லுங்க! யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,
சன்னைத் தின்ன முடியாது – மானே
உன் கண்ணு சன்னு!
பப்ஸைத் தின்ன முடியும் – மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸுக்கு நோஸ் கெடையாது – தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா!
என் எதயம் ஒரு Hard Disk!
நீ வந்துப்புட்ட -
இனி அது Heart Disk!
நீ உன் எதயம் give.
நான் என் எதயம் give.
அதுக்குப் பேருதான் லவ்வு!
இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்குப்புறம் சான்ஸே இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!
2 ரூபா காதல்!
டவுன் பஸ். முதல் சீட்டில் சொப்னா! நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க! ’2 ரூபா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 2 ரூபாயை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 2 ரூபாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா! உடனே கருமம் புடிச்ச மாதிரி வாங்காம, ‘எனக்கு 2 ரூபா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்’ பளிச்சுன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை நெஞ்சுல இருந்து எடுத்து விடணும். அப்புறமென்ன, உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல போய்கூட நிக்கலாம்.
போஸ்டர் விடு தூது!
சொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா? முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற?’ன்னு சொப்னா கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரணும். அப்பவும் உட்டுட்டா, அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமூ!
SMS புரட்சி!
(ஒரு சின்ன திருத்தம்: தலைப்பு மேலே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜமான தலைப்பு இதுவே : ‘லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!’ )
No comments:
Post a Comment
என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................