சுலபமாக எடையைக் குறைக்கும் வழி.
ஒரு மனிதர் ரொம்ப குண்டாக இருந்தார். உடல்
எடையைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் முடியலை. அந்த நேரம் பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தைப்
பார்த்தார். உடல் எடை குறைய ஒரு ஜிம்மில் ஒரு புதுமையான வழியை அறிமுகப் படுத்தியிருந்தனர். அவரும் அங்கு சென்று விசாரித்தார். நீங்க பணம்
கட்டுங்க ஒரு மாதம் டிரீட்மெண்ட் தருவோம்.எப்படி யார் தருவது எல்லாம் பணம் கட்டிய பிறகு சொல்வோம் என்றார்கள். அவர்கள் கேட்ட தொகை
அதிகம்னாலும் கட்டிவிட்டு வந்தார்.
மறுநாள் யாரோ கதவைத் தட்ட திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. மிக அழகான ஒரு பெண் கவர்ச்சியான உடையில் நின்றிருந்தாள். தான் அந்த ஜிம்மில் இருந்து வருவதாகவும் அவருக்கு எடை குறைக்கும் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொன்னாள்.
இவர் ஏதோ அந்த அழகி 'முந்தானை முடிச்சு' படத்துல தீபா டீச்சர் 'அ' ஆ போட கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்த மாதிரி தன்னைத் தொட்டு உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கப் போகிறாள் என சந்தோஷப்பட அவளோ அவள் முன்னால் ஓடுவதாகவும் இவர் தன்னை துரத்திப் பிடிக்க வேண்டும் அப்படிப் பிடித்தால் அவள் அவருக்கே சொந்தம் என்றாள்.
தொட்டாலே போதும்னு நெனச்ச நம்ம ஆளு அவளே சொந்தமாகலாம் என்றதும் தேன் குடித்த நரி போல மயங்கி அவளைத் துரத்தினார். மெல்லிய அழகான அந்த பெண்ணின் மாரத்தன் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நம்ம ஆளு தஸ்ஸூ ப்ஸ்ஸூனு மூச்சிறைக்க ஓடினார்.பிடிக்க முடியலை இது மறுநாளும் தொடர,இப்படியே ஒரு மாதம் போனதும் அவர் எடை 20 கிலோ குறைஞ்சிடுச்சி. ஆசை விடாமல் அடுத்த மாதமும் பணம் கட்டினார்.
இந்த முறை இன்னும் மிக அழகான ஒரு பயிற்சியாளினி வந்தாள். இவரும் இவளையாவது பிடிச்சிட்டு அடையனும் என வேகமாக துரத்த ஆரம்பித்தார்.முடியலை. இந்த மாதம் 30 கிலோ குறைந்து விட்டது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் பணம் கட்டி னார்.கடந்த இரண்டுமுறையை விட இன்னும் அழகான பெண் வருவாள்.எப்படியும் அவளைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். மறுநாள் கதவு தட்டப்பட்டது.ஆசையோடு கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சி இல்லீங்கோ பயமான அதிர்ச்சி.
வாட்ட சாட்டமான மாமிச மலை போல ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான்.ஆளு பார்த்தா நம்ப 'ஹல்க்கு' [பச்சை மனிதன்] மாதிரி இருந்தான். இந்தமுறை அவன் துரத்த இவர் ஓட வேண்டுமாம்.அப்படி ஓடும்போது அவனிடம் சிக்கினால் இவர் அவனுக்கே சொந்தமாம்.
துரத்தல் ஆரம்பித்தது. அவன் கிட்ட மாட்டக் கூடாதுன்னு ஓடினார்..ஓடினார்...ஓடிக் கொண்டேயிருந்தார்.
ஒரு மாதம் முடிந்து பயிற்சிக்கு வந்த மாமிசமலை ஆள் ஜிம்முக்குபோய் ரிப்போர்ட் கூட குடுத்துட்டார்.
ஆனால் நம்ம ஆள இன்னும் காணோம்.
வாழ்த்துக்கள்.
ReplyDelete