தேடுங்கள்.....

Thursday, September 13, 2012

சர்தார்ஜி ஜோக்ஸ் 2


 படித்ததில் பிடித்தது

சர்தார்ஜியின் நண்பர்: செஸ் விளையாடலாமா?


சர்தார்ஜி: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் ஷூ போட்டுட்டு வந்துறேன்!!

***
ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். “ 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”, சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.

கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். “ 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே, “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார். “4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.

***
சர்தார்ஜியைப் பார்க்க அவரது நண்பர் வீட்டிற்கு வந்தார். அங்கு சர்தார்ஜி தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று அவரது நண்பர் கேட்டபோது, சர்தார்ஜி சொன்னார்: ‘எனது அம்மா இறந்துட்டாங்க’

நண்பர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நாளை வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.

மறுநாள் போனபோது, அப்பவும் சர்தார்ஜி அழுது கொண்டிருந்தார். நண்பர் என்னவென்று கேட்டார்.

சர்தார்ஜி சொன்னார்: “என் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினான். அவனுடைய அம்மாவும் இறந்துட்டாங்களாம்”
***
 இதே சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஆற்றில் குதிக்கப் போனாராம்.
அப்பொழுது ஆற்றில் இருந்த மீனை பார்த்து, ”நான் தான் சாகப் போறேன், நீயாவது பிழைத்துக் கொள்” அப்படின்னு மீனை தூக்கி ஆற்றுக்கு வெளியில் போட்டாராம் ..
*********************************************************************************

2 comments:

  1. கேள்விப் படாத ஜோக்குகள், நல்லாயிருக்கு !! [தயவு செய்து கமண்டு பாக்ஸ் வேர்ட் வெரிபிகேஷனை நீக்கவும்.]

    ReplyDelete
  2. உங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பரே! அடுத்து "மர்ம முடிச்சு" என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன்... இதுவும் படித்தவைதான், விக்கிபீடியா, கூகிள் உதவியுடன் கொஞ்சம் மேருகேற்றிக்கொண்டிருக்கிறேன்......

    ReplyDelete

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................