"ஹலோ! ஹெள ஆர் யூ?"
"என்னடா பெரீய பெரீய இங்கிலிஸ் பொளக்கிறே?"
"வாட்! ஐயாம் ஒன்லி ஸ்மால் இங்கிலீஷ்..."
"அடிசக்கை. ஹீரோ ஆகிறாயோ இல்லியோ? இங்கிலீஸ் நல்லாப் பேசுவே போலிருக்குது. ஏதானும் வாத்யார் வெச்சிருக்கியா?"
"யூ ஆர் கரெக்ட். ஐயம் கீப்பிங் இங்கிலீஷ் மிஸ்..."
"கீப் சீப்பெல்லாம் வெச்சிக்கினியா? ரொம்பத்தான் துட்டு வெளையாடுது உங்கிட்டே? கையிலே எத்தனை படம்?"
"டூ பிக்சர்ஸ். அப்புறம் ஆடு பிலிம் ஒண்ணு."
"ஆடு கூட நடிக்கிறியா?"
"வாட் மான்? ஆடு பிலிம் தெரியாது. ஆர்லிக்ஸ், சோப், பவுடர்... இது மாதிரி படம்."
"ஓ! விளம்பரப் படமா? என்னா விளம்பரம்... சோப்பு கீப்புன்னா நமக்கு ரெண்டு சீப்பா வாங்கித்தாப்பா..."
"யூ ஆல்வேஸ் ஷெல்·ப் பினிஷ்...."
"ஷெல்பெல்லாம் வாங்கியிருக்கியா?"
"யு ஆர் ரொம்ப புவர் இங்கிலீஷ்..."
"நானாடா புவரு? கையிலே அஞ்சு விரல்லே மோதிரம் போட்டிருக்கேன்..."
"நோ... நோ... யு டு நாட் நோயிங் மை இங்கிலீஷ். மை ஆல்ஸோ நாட் நோயிங் பி·போர் பட் ஆ·ப்டர் ஆ·பர் சுப்பீரியர்."
"இங்கிலீஸ் படிச்சா சூப்பர்வைசர் ஆயிடலாம்கறே?"
"சொன்னால் ஆங்கர் படறே? இங்கிலீஸ் படிச்சா ஹை ஆயிடுவேன்னு சொல்றேன்... மி மாதிரி..."
"ஒனக்கு வசதி இருக்குது. இங்கிலீஸ்காரியை வெச்சிகினு இருக்குறே..."
"வாட்! வாட்! இங்கிலீஷ்காரியை நான் வெச்சிகிட்டிருக்கேனா? அப்ஸட்டாப் பேசாதே. நமக்குள்ளே மிஸ் அண்டர் ஸ்டுட் ஆயிடும். அதை நான் வெல்கம் பண்ணலை."
"நீ தானேடா சொன்னே... இங்கிலீஸ் டீச்சரை கீப்பா வெச்சிகிட்டிருக்கேன்னு... நடிகனாயிட்டிருக்கிறே... வெச்சுக்கோ நான் பொறாமைப்படலை."
"எகெய்ன் எகெய்ன் நீ அதையே சொல்லிட்டிருக்கிறே... அதான் புவர்னு சொன்னேன்..."
"புவர்னு மட்டும் சொல்லாதே. நான் சொந்த வூட்டுலே இருக்கேன். கழுத்திலே பாத்தியா செயினு... அஞ்சு பவுனு..."
"புவருன்னா ஏழைன்னு அர்த்தமில்லேடா... இங்கிலீஷிலே புவர்னா ஒனக்கு இங்கிலீஷ் நோயிங் அவ்வளவு ஸாடிஸ்பி இல்லே.... இதெல்லாம் பிரேஸ்..."
"பிரேஸ்னா..."
"அதான் பிரேஸ¤ங்க... பிரேஸ் போட்டுப் பேசினாத்தான் நல்ல இங்கிலீஷ்..."
"பிரேஸ் பிரேஸ¤ங்கறியே அது என்னடா எளவு?"
"பிரேஸ்னா... அதாவது... வந்து... வந்து... இங்கிலீஷே பேசிப் பேசி இப்போ டமில் திங்க் வரமாட்டேங்குது..."
"நீ உன்னோட இங்கிலீஸ் கூத்தியாகிட்டே போய்க் கேட்டுக்கிட்டு வந்து நாளைக்குச் சொல்லு..."
"ப்ளீஸ்! அவள் கெளவிடா..."
"பின்னே அவளைப் போய் ஏன் கீப்பா வெச்சிகினு இருக்கிறே?"
"கீப்புனு வெச்சிகிட்டு இருக்கேன்னா..."
"அதான் சொல்லிட்டியே..."
"நோ.. நோ... யு டு நாட் நாலட்ஜிங் மி கரெக்ட். வெச்சிகிட்டுன்னா தமிழ் வெச்சிகிட்டு இல்லே... இங்கிலீஷ் கீப்புக்கு நெறய அர்த்தம். டீச்சர் போட்டுகிட்டிருக்கேன்னு அர்த்தம். அதான் பிரேஸ்ங்கிறது. அயம் கீப்பிங் ஒன் டாக்குன்னா நான் ஒரு நாயை வப்பாட்டியா வெச்சிகிட்டிருக்கேன்னு அர்த்தமில்லே... அங்கே கீப்புன்னா வளர்த்துகிட்டிருக்கேன்னு அர்த்தம். யாராச்சும் பையன் நல்லா மார்க் வாங்கினால் வாத்தியாரு ப்ராஸஸ் ரிப்போர்ட்டுலே கீப்பு அப்புனு எழுதுவாரு."
"பையன் பேரு 'அப்பு' இல்லேன்னா?"
"யார்ரா நீ? யு ஆர் கிண்டலிங் மின்னு நெனைக்கிறேன். கீப்பு அப்புனா நீ மேலே படின்னு அர்த்தம்."
"அப்புன்னா பேராங்காட்டியும்னு நினைச்சிட்டேன்... கோபிச்சுக்காதே. எனக்கு நீ நடிப்பு கத்துக் குடுக்காட்டியும் போகுது. நாலெழுத்து இங்கிலீஷ் கத்துக் குடுத்துடுப்பா..."
"நோ ப்ரதர். டைம் இஸ் பிஸி. ஈச் மார்னிங் ஈச் ஷ¥ட்டிங்... அதுவும் அவுட் அ·ப் டோர்னா... நாலு நாள் ஆயிடுது..."
"பொதுவா அவுட் அ·ப் டோரெல்லாம் மூணு நாள்னு தானே பொம்பிளைங்க சொல்லுவாங்க..."
"டேய் மவனே... நீ என்னை வார்ரதுக்கின்னே ஸ்பீக் பண்ண வந்திருக்கிறே..? இனி மேல் நான் உன்கிட்டே இங்கிலீஷ் டோன்ட் டாக்..."
நன்றி: ஈகரை சிவா அண்ணா
No comments:
Post a Comment
என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................