தேடுங்கள்.....

Thursday, August 1, 2013

ஜோக்ஸ் - 8



*******************************
"சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மேனேஜரை..."

"
அவரும் சாப்பிட மாட்டார் சார்!"
*******************************
"
நாலுவித மருந்து சாப்பிட்டும் வயித்து வலி நிக்கலை டாக்டர்..."

"
அது என்னங்க நாலுவித மருந்து...?"

"
போலி மருந்து, காலாவதியான மருந்து, கலப்பட மருந்து, நிஜ மருந்து"

*******************************

"
தலைவரு வெளியில போகும்போது ஏன், "செட்டப்"பையே கூட்டிக்கிட்டு போறாரு?"

"
கேட்டா... "வீடு வரை மனைவின்னுதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க..."ன்னு விளக்கம் தர்றாரே!"

*******************************

"
மன்னரின் வீக்னஸ் அண்டை நாட்டு மன்னருக்கும் தெரிந்துள்ளது என்று எப்படிச் சொல்கிறீர்....?"

"
சிட்டுக்குருவியிடம் ஒலை கொடுத்து அனுப்பியிருக்கிறானே...!"

*******************************

"
நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."

"
எப்படி...?"

"
மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"

*******************************

"
ஏன் அடிக்கடி ஜெயிலுக்கு வர்ற?"

"
வாரத்துல ஒரு நாளாவது கறி சாப்பிடாம என்னால இருக்க முடியல..."
*******************************

2 comments:

  1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................