தேடுங்கள்.....

Thursday, August 1, 2013

ஜோக்ஸ் - 7

******************************************************************
இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார் "இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால் அநேகமாக ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்".

மற்றொரு சர்தார்ஜி "நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்" என்று.  
******************************************************************
ஏ‌ன் அழுது‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க?
எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு... என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
அய்யய்ய நீங்க நா‌ய் க‌‌றியெல்லாம் சாப்பிடுவீங்களா
******************************************************************
ஒயின் ஷாப்ல வேலைக்குச் சேந்தானே உன் பையன் சம்பளம் ஒழுங்கா வருதா?
சம்பளம் எங்க வருது சரக்குதான் வருது.
******************************************************************
சா‌‌ர் இ‌ந்த க‌ம்பெ‌னில ஏதா‌ச்சு‌ம் செ‌க்யூ‌ரி‌ட்டி வேல இரு‌ந்தா என‌க்கு‌க் குடு‌ங்க சா‌‌ர்.

செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு?

சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சுக்குவேன் சார்!
******************************************************************
ஊர்ல
இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா
ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு
பிடிக்கும்.
******************************************************************

என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை
பிடிச்சுட்டார்..
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான்
ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!
******************************************************************

நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு
குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால்
ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே
விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.
******************************************************************

நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர்
இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு
செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர்
பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க
பிழைச்சுடுவீங்க
******************************************************************

தந்தை (மகனிடம்)
சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட இரண்டு
ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய்
சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.
******************************************************************

கிரேசி மோகன்
எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான்
சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.
******************************************************************
"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க?"

"
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"
******************************************************************

"
என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"

"
வழக்கமா செய்யறதுதானே!"

"
நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
******************************************************************
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?

என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.

வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்
***************************************************************

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................