தேடுங்கள்.....

Saturday, August 10, 2013

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
palm-reading1 கைரேகை  சாஸ்திரம்
palm-reading கைரேகை சாஸ்திரம்
கைரேகை பலன்கள்:
பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார் என்பது எமது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
விதி ரேகை:
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.
ஆயுள் ரேகை:
ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.
palmistry-major-lines1 கைரேகை சாஸ்திரம்
palmistry-major-lines1 கைரேகை சாஸ்திரம்
புத்தி ரேகை:
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது! உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.
ஆரோக்கிய ரேகை:
ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை:
உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Friday, August 9, 2013

ஆண்களுக்கான மச்ச பலன்கள்!

images
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.
இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்களை பார்ப்போமா…

01. புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
02. நெற்றியின் வலது புறம் & தனயோகம்
03. வலது புருவம் & மனைவியால் யோகம்
04. வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
05. வலது கண் & நண்பர்களால் உயர்வு
06. வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
07. இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
08. மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
09. மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
10. மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
11. மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
12. மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
13. மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை,
கலைத்துறையில் நாட்டம்
14. வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
15. இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
16. வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
17. இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
18. காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
19. தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
20. கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
21. இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால்
விரும்பப்படுவார்
22. வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
23. வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
24. அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார,
ஆடம்பர வாழ்க்கை
25. புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

நன்றி: துளிகள் வெப்

Monday, August 5, 2013

நட்பின் நிழல்




முற்றத்துப் பூமரமாய் என்
முகத்தெதிரே வந்து போகும்
நட்பின் நிழல்கள் உன்னை
நிஜப்படுத்தி கொண்டிருக்கும்

எனது வீட்டுத்தோட்ட
மரங்களில் ஓடித்திரிந்து விளையாடும்
அணில்களின் பாய்ச்சல்கள்
உனது நொடிக்குரும்புகள்

நிலவின் எச்சங்களை
காலங்கடந்த ஆராய்ச்சியில்
மானுடர்கள் புகட்டிடினும்
நட்பின் சுவடுகளையே
முதன்மைப்படுத்துவர்.

பூவின் இதழ்கள் போல
நமது எண்ணங்கள் இணைந்திடும்போது
நட்பின் வாசனைகள்
எல்லை கடந்து விசாலமாகும்.

நட்சத்திரப் பூக்களை
கையில் அள்ளி
நீரோடையாய் பகிர்கிறேன்
நமது நட்பு கடலில் கலக்கட்டும்.

நண்பர்களுக்கு எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்



Friday, August 2, 2013

ஜோக்ஸ் - 9

 *******************************
முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
*******************************
ஞாபக மறதி
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே
*******************************

இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்
அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
*******************************

என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
*******************************


டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்
*******************************


டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
*******************************


அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்
*******************************


இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
*******************************


மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
*******************************


டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே
*******************************

பெண்கள் இப்படித்தான்...



பனி பெய்துகொண்டிருந்த திங்கட்கிழமை காலையில், எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. கார்கள் இரண்டும் மிகப் பலத்த சேதமாகின ஆனால் காரில் பயணம் செய்த இருவருக்கும் தெய்வாதீனமாக ஒன்றும் ஆகவில்லை. 

ஒரு காரினுள்ளேயிருந்து வெளியே வந்த ஆண் மற்றைய காரின் ஓட்டுனராகிய பெண்ணைப் பார்த்து திட்டத்தொடங்கினான். அந்தப்பெண் பொறுமையாக  "இதோ பார் எங்கள் இருவரது கார்களும் பலத்த சேதமாகிவிட்டன, ஆனால் பார் கடவுள் செயலால் நாங்கள் இருவருமே பிழைத்துக்கொண்டோம். ஏன் நாங்கள் நண்பர்களாகி நமது மீதமுள்ள வாழ்நாட்களை சந்தோஷமாக களிக்கக்கூடாதென்றாள் ?"  

அதற்கு அவன் "உண்மைதான் ஆனாலும் தவறு உன் பக்கம்தான், பெண்களை கார்கள் ஓட்ட அனுமதிக்கவே கூடாது என்றான்."  அவள் மேலும் பொறுமையாக, "இதோ பார் இன்னொரு அதிசயம் எனது கார் முழுமையாக சேதமானாலும் நான் வைத்திருந்த வைன் போத்தல் இன்னும் அப்படியே இருக்கிறது, மெய்யாக கடவுள் நாங்கள் இதை அருந்தி எங்களது அதிஷ்டத்தை கொண்டாடவே விரும்புவார் என்றாள்."

சிறுது யோசித்த அவன் "சரி" என்று கை குலுக்கி போத்தலில் இருந்த அரைவாசி வைனை குடித்துவிட்டு மீதமுள்ளதை அவளிடம் நீட்டினான். அவள் திருப்பி அவனிடமே தந்துவிட்டாள்.

அவன், "ஏன் நீ அருந்தவில்லையா?"

அவள், "இல்லை, நான் போலீஸ் வரும் வரையில் காத்திருக்கிறேன் "